Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு தேடி கேன்வாசிங் செய்து அட்மிஷன் போடும் ஆசிரியர்

Advertiesment
வீடு தேடி கேன்வாசிங் செய்து அட்மிஷன் போடும் ஆசிரியர்
, புதன், 7 ஜூலை 2021 (23:21 IST)
கல்விக்கண் திறந்த காமராஜர் திறந்து வைத்த அரசுப்பள்ளியில் அசத்தும் பள்ளி – தனியார் பள்ளிகளை விட ஒரு படி கூட சென்று வீடு தேடி கேன்வாசிங், மட்டுமில்லாமல், அட்மிஷன் போடும் தலைமை ஆசிரியை கரூர் அடுத்துள்ள அரசு தொடக்கப்பள்ளி.
 
கல்விக்கண் திறந்த காமராஜர் திறந்து வைத்த அரசுப்பள்ளியில் அசத்தும் பள்ளி – தனியார் பள்ளிகளை விட ஒரு படி கூட சென்று வீடு தேடி கேன்வாசிங், மட்டுமில்லாமல், அட்மிஷன் போடும் தலைமை ஆசிரியை கரூர் அடுத்துள்ள அரசு தொடக்கப்பள்ளி
 
கல்விக்கண் திறந்த காமராஜர் திறந்து வைத்த அரசுப்பள்ளியில் அசத்தும் பள்ளி – தனியார் பள்ளிகளை விட ஒரு படி கூட சென்று வீடு தேடி கேன்வாசிங், மட்டுமில்லாமல், அட்மிஷன் போடும் தலைமை ஆசிரியை கரூர் அடுத்துள்ள அரசு தொடக்கப்பள்ளி
 
கரூர் அடுத்துள்ள, ஆண்டாங்கோயில் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை, இடைநிலை ஆசிரியைகளோடு, பெற்றோர் ஆசிரியர் சங்கமும், முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து அரசுப்பள்ளியில் சேர்க்கைக்காக துரித நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே கேன்வாசிங் செய்து வருவதோடு, வீடு தேடி சென்று பள்ளிக்கான அட்மிஷன் போட்டும் வருகின்றது. இதுமட்டுமில்லாமல், அந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல், பிற பள்ளிகளாக இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளில் சந்தேகம் உள்பட பல்வேறு சந்தேகங்களை பள்ளிக்கு சென்று கேட்டாலே போதும், உடனே சந்தேகத்தினை தலைமை ஆசிரியை மற்றும் இடைநிலை ஆசிரியைகளும் தீர்த்து வைத்து மளமளவென்று கிளாஸ் எடுக்கும் காட்சிகள் இங்குள்ளோரை நெகிழ வைத்துள்ளது
 
 
 
தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் கல்விக்கண் திறந்தவர் என்று பெயர் எடுத்தவர் காமராஜர் ஆவார், இவரது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பட்டித்தொட்டியெல்லாம், கல்விகளை கற்க பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், அப்படி 1962 ஆம் ஆண்டில், துவங்கப்பட்ட  பள்ளி தான் கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோயில் புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகும், இந்த தொடக்கப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 70, மாணவ, மாணவிகள் பயின்ற நிலையில், 5 ம் வகுப்பில் பயின்ற 15 மாணவர்கள் 6 ம் வகுப்பில் பயில, அடுத்த பள்ளிக்கு மாறியுள்ளார்கள். இதுமட்டுமில்லாமல், தமிழக அளவில் முன்னாள் மாணவர்கள் நல சங்கம் என்கின்ற சங்கத்தினையும் இப்பள்ளி உருவாக்கியுள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் த.கண்மணி தலைமையில், இடைநிலை ஆசிரியைகள் தீ.கீதா, சு.சுபத்ரா, கு.கீதா, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகளோடு, பெற்றோர் ஆசிரியர்ர் சங்கத்தலைவர் குணசேகரன், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் தனபால் உள்ளிட்டோர், அங்குள்ள சிறுவர், சிறுமிகளையும், கல்வி பயின்று இடைநின்றவர்களையும் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு சேர அறிவுறுத்தப்பட்டும், அவர்களை கண்டறிந்தும், புதிய மாணவர்களையும், மாணவிகளையும் சேர்க்க ஆங்காங்கே வீடுகள் தோறும் பள்ளியில் சேர்க்கை அடங்கிய துண்டுபிரச்சூரமும், பள்ளியில் சேர்க்கைக்கான அட்மிஷன் பார்ம்களையும் எடுத்து ஆங்காங்கே அட்மிஷன் போட்டு வருகின்றனர். வீடுகள் தேடி சென்று அரசு பள்ளிகள் அட்மிஷன் போடும் நிகழ்வு இங்கே மட்டும் தான் நிகழ்கின்றது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்., இதுமட்டுமில்லாமல், கடந்த 18 ம் தேதி முதல் இன்றுவரை 25 சிறுவர், சிறுமிகளை பள்ளியில் சேர்த்ததோடு, இன்றுவரை தற்போது பள்ளியில் மாணவ, மாணவிகள் 85 நபர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பள்ளி திறக்கா விட்டாலும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், கல்வி ரேடியோ மூலமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கென்று ஒரு வாட்ஸ் அப் ஒன்றினை கிரியேட் செய்து அதன் மூலமாக ஆன்லைன் கிளாஸ்களை நடத்தி வருகின்றது என்றால் மிகப்பெரிய ஒரு விஷயம் ஆகும், இந்நிலையில், கல்வி தொலைக்காட்சி மற்றும் கல்வி ரேடியோ மூலமாக பாடம் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் இப்பள்ளிகள் இல்லாமல் பிற பள்ளி மாணவ, மாணவிகளாக இருந்தாலும் சரி, பள்ளி ஆசிரியைகள் மற்றும் தலைமை ஆசிரியை அந்த சந்தேகங்களை சரி செய்து கொடுத்தும், அந்த சந்தேகத்தினை மொத்தமாக நிவர்த்தி செய்தும் கொடுத்தும் வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் இப்பள்ளியில் ஸ்மார்ட் டிவி., ஸ்மார்ட் கிளாஸ் என்று தனியார் பள்ளிகளுக்கு சமமாக அனைத்து வசதிகளும் கொண்டு அரசுப்பள்ளியில் தனி முத்திரை பதித்து வருகின்றது. அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை வீடுகள் தேடி சென்று கேன்வாசிங் செய்வதோடு, அங்கேயே அட்மிஷன் போட்டு வரும் அரசுப்பள்ளி என்றால் அது ஆண்டாங்கோயில் புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மட்டுமே என்கின்றனர் மாவட்ட அளவில் உள்ள சமூக நல ஆர்வலர்களும், கல்வியாளர்களும், இதே போன்று தினம், தினம் பள்ளியில் வரும் ஆன்லைன் கிளாஸ்ல் சந்தேகம் என்றாலும் பள்ளிக்கே சென்று அங்குள்ள தலைமை ஆசிரியை கண்மணியிடம் சந்தேகத்தினை தீர்த்து வருகின்றனர் அங்குள்ள மாணவ, மாணவிகள்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களைத் தேடி மருத்துவம்... அமைச்சர் முக்கிய தகவல்