டைம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசம்; பால்வாடி மிஸ்ஸுடன் சிக்கிய சார்!

புதன், 11 செப்டம்பர் 2019 (13:57 IST)
பள்ளி கழிவறையில் அங்கன்வாடி மைய அமைப்பாளருடன் பள்ளி ஆசிரியர் தகாத முறையில் நடந்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாமக்கல் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வளாகத்தின் உள்ளேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. 
 
இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும், அங்கன்வாடி அமைப்பாளரும் பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒருமுறை இதை மாணவர்கள் கண்டு தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 
 
பெற்றோர்களும் இதை எதிர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தலைமை ஆசியர் இருவரையும் அழைத்து கண்டித்து விட்டுள்ளார். இதன் பின்னரும் இருவரும் தங்களது பழகத்தை கைவிடவில்லை. 
 
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்துள்ளனர். இது தற்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மீண்டும் இருவழி சாலையானது அண்ணா சாலை..