மது வாங்க வருபவர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயத்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் அல்லது அதற்கு மேல் வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடை பணியாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி இடை நீக்கம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பத்து ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது