அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் 42 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இன்று அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் 42 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரூபாய் 81.7 லட்சம் ரொக்க பணமும், ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்பு தொகை ரூபாய் 41.9 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒற்றுமை