Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் மூட உத்தரவு!!

Advertiesment
நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் மூட உத்தரவு!!
, வியாழன், 11 நவம்பர் 2021 (12:33 IST)
நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு. 

 
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா 10 ஆம்  தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின் புறம் உள்ள  2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாக தீபமும் ஏற்றப்படுகிறது. 
 
இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளதால் டாஸ்மாக் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை விட்டாலும்… தண்ணீர் வடியல..! – சென்னை, காஞ்சியில் நாளையும் விடுமுறை!