உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக நிர்வாகம் சற்று முன் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் எங்கெங்கு திறக்கப்படாது? எத்தனை மணி வரை திறக்கப்படும், எத்தனை மணி வரை திறக்கப்படும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்ற ஆணையை தொடர்ந்து மதுபான கடைகள் நாளை முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கடைகள் இயங்காது
மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.