Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரத்தை மது அருந்தி மகிழ்ந்த மதுப்பிரியர்கள்! – ஒருநாள் டாஸ்மாக் கலெக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
நேற்று சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் 14ம் தேதி அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது.

நேற்று ஆகஸ்டு 15ல் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் அதிகளவில் மது வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.

இதனால் நேற்று முன்தினம் ஆகஸ்டு 14 அன்று ஒருநாளில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
மண்டலவாரியாக மதுரையில் அதிகபட்சமாக ரூ.58.26 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னையில் ரூ.55.77 கோடிக்கும், சேலத்தில் ரூ.54.12 கோடிக்கும், திருச்சியில் ரூ.53.48 கோடிக்கும், கோவையில் ரூ.52.29 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments