தேசிய கொடி ஏற்றும் போது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பின்வருமாறு…
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
பிரதமர் மோடி ஆகஸ்டு 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை மாட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் சமூக வலைதளங்களிலும் காமன் டிபியாக தேசியக்கொடியை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை ஏற்று பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இந்நிலையில் கொடி ஏற்றும் போது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பின்வருமாறு…
# தேசியக் கொடியை இரவும் பகலும் ஏற்றலாம், திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ ஏற்றலாம்.
# காட்சிக்கு வைக்கப்படும் மூவர்ணக் கொடி மரியாதைக்குரிய இடத்தில் தெளிவாக, நேர்த்தியாக வைக்க வேண்டும்.
# சேதமடைந்த அல்லது சிதைந்த கொடியை ஒருபோதும் ஏற்றக்கூடாது.
# தேசியக் கொடி எப்போதும் சரியான நிலையில் இருக்க வேண்டும், சாய்ந்தோ சரிந்தோ வைக்கக் கூடாது.
# வீடு அல்லது கட்டிடத்தின் மேல் உரிய கம்பில் மட்டுமே பறக்க விட வேண்டும்
# தேசியக் கொடியை விட உயரமாகவோ அல்லது மேலேயோ அல்லது அருகருகேயோ வேறு எந்தக் கொடியும் வைக்கப்படக்கூடாது.
# மற்றக் கொடிகளோடு ஏற்றும் போது, அதை விட உயரமான கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். கம்பத்தின் உச்சியில் ஏற்ற வேண்டும்.
# மலர்கள், மாலைகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் கொடிக்கம்பத்தில் அல்லது அதற்கு மேலே வைக்கக் கூடாது.
# குப்பைத் தொட்டியில் கொடியை வீசக்கூடாது, கொடியை பயன்படுத்திய பிறகு நேர்த்தியாக மடித்து தனித்து வைக்க வேண்டும்.