Publish Date: Mon, 19 Apr 2021 (15:01 IST)
Updated Date: Mon, 19 Apr 2021 (15:25 IST)
திருவாரூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து 40000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள மதுவகைகள் திருடப்பட்டுள்ளன. இன்று காலை கடை திறக்க சென்ற ஊழியர் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் பல கடைகளில் இதுபோல மதுபாட்டில்கள் திருடுப் போனது குறிப்பிடத்தக்கது.
webdunia
Publish Date: Mon, 19 Apr 2021 (15:01 IST)
Updated Date: Mon, 19 Apr 2021 (15:25 IST)