Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 6 மே 2020 (08:40 IST)
தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை உயர்த்தி இருப்பது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருந்த மதுப்பிரியர்களுக்கு தமிழக அரசின் புதிய உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180மிலி மதுபானங்கள் அடக்கவிலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்மூடித்தனமாக தாக்கும் இஸ்ரேல்! சாலையெங்கும் பிணங்கள்! - 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி..!

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments