Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (12:46 IST)
டாஸ்மாக்கில் துணை பொது மேலாளராக பணியாற்றும் ஜோதி சங்கர், சென்னையின் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியான விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முந்தைய நாளில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் விசாரணை நடைபெற்றிருந்தது. தற்போது ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெறுகிறது.
 
டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.1,000 கோடிக்கான வருவாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை டாஸ்மாக் இயக்குநர் விசாகன், மற்றும் திரை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடுகளுடன் மேலும் எட்டு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
சனிக்கிழமையிலும் 9 இடங்களில் சோதனை தொடரப்பட்டது. இச்சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, தொழிலதிபர் தேவகுமார், அரசு ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments