Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? தஞ்சை ஆட்சியர் கேள்வி..!

Advertiesment
தஞ்சை

Siva

, புதன், 10 ஜனவரி 2024 (07:14 IST)
மழை பெய்தால் பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை விட வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் மிதமான மழை அல்லது கன மழை பெய்தால் உடனே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படும். 
 
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது குறித்து கூறிய போது  மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்துவிட்டாலோ பெற்றோர்கள் எனக்கு போன் செய்து பள்ளிக்கு விடுமுறை உண்டா என்று கேட்கின்றனர். 
 
மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை வேண்டும்?  நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் மழை தொடங்கிவிடும். மழையில் நடந்தபடியே பள்ளிக்கு செல்வேன். மழைக்காக விடுமுறை என நான் நினைத்து வீட்டில் இருந்திருந்தால் என்று உங்கள் முன் கலெக்டராக இருந்திருக்க மாட்டேன். 
 
தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டுமே மற்றவர்களால் திருட முடியாத சொத்து என்று கூறியுள்ளார் 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் குதித்த இஸ்ரேல்; தீவிரமாகும் சிக்கல்