சென்னை உள்ளிட்ட 4மாவட்டங்களில் வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாள் என்றும், ஜனவரி 6, மற்றும் 20 ஆகிய தேதிகளிலு, பிப்ரவரி 3, 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.