தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளுக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து கூறி வரும் நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கேப்டன் என பெயர்பெற்றவரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக உடல்நல குறைவால் விஜயகாந்த் பொது இடங்களுக்கு அதிகமாக வருகை தருவதோ பேசுவதோ கிடையாது. அவ்வபோது அறிக்கைகள் மட்டும் அளித்து வருகிறார்.
அபரது பிறந்தநாளில் அவரை அவரது பட தலைப்புகளால் வாழ்த்தியுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். ”வானத்தை போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று, புலன் விசாரணை செய்தாலும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக, கேப்டனாக மரியாதையுடன், நெறஞ்ச மனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.