செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அதிக சுங்க கட்டணம் கேட்ட ஊழியரை பெண் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் காரில் வந்த பெண் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் போதிய பேலன்ஸ் இல்லாத நிலையில் பணமாக 110 ரூபாய் கட்ட வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர் கூறியுள்ளார்.
இதனால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதா என அந்த பெண்ணுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் அந்த பெண்ணும், அவருடன் வந்த ஆணும் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், சுங்கசாவடி கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் பரபரப்பு எழுந்துள்ளது.