ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் பெரும் சாதனைகள் படைத்துள்ளதற்காக புவி அறிவியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான தேசிய விருது தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புவி அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய விருது 5 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த எம்.ஏ.ஆத்மானந்தும் ஒருவர்.
சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப இயக்குனர் எம்.ஏ.ஆத்மானந்த் இந்தியாவின் மிக ஆழத்திற்கு பயணிக்கக்கூடிய முதல் கடல் வாகனத்தை உருவாக்கியுள்ளார். இந்த வாகனத்தின் மூலம் கடலில் சுமார் 6 கி.மீ தூரம் ஆழத்திற்கு பயணிக்க முடியும். இதனால் இந்தியாவின் கடல் பகுதிகளில் ஆழத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர, கடல்சார் ஆய்வுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்காக மேலும் நான்கு விஞ்ஞானிகளுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.