Publish Date: Fri, 07 Jan 2022 (12:47 IST)
Updated Date: Fri, 07 Jan 2022 (12:49 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்புகள், வேளாண் நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.