தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 6 முதலாக நடத்தப்பட்ட கஞ்சா விற்பனை குறித்த ரெய்டில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பல பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறை ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்தியது. இதில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா, கஞ்சா விற்றவர்கள் மற்றும் அதை பதுக்கியவர்கள் என பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை கஞ்சா விற்றதற்காக 6,623 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக 5,037 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடத்திய வேட்டையில் ரூ.4.20 கோடி மதிப்புள்ள குட்கா, ரூ.1.80 கோடி மதிப்புள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.