சென்னையில் மழைநீர் செல்ல ஏதுவாக 45 கி.மீ தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் பருவமழை பெய்யும்போதெல்லாம் தலைநகரான சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்குவது தொடர்கதையாகியுள்ளது. முறையாக மழைநீர் வெளியேற வடிகால்கள் இல்லாததே இதற்கு காரணம் என பலரும் கூறி வரும் நிலையில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்ளிட்ட இடங்களில் வடிக்கால்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூ.120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.