வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு வங்க கடலின் மைய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், 25ம் தேதி வாக்கில் தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.