Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (10:25 IST)
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ காற்றால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது. தென் தமிழக பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட கால அவகாசமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி அன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டிருப்பதால் பட்டாசு பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments