Publish Date: Wed, 05 Jan 2022 (14:19 IST)
Updated Date: Wed, 05 Jan 2022 (14:22 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்க முதல்வர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் சில உடனடி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தவும் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தொடர செய்யவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.