தூய்மை இந்தியா திட்டத்தின் படி கிராமங்களில் வெளியில் மலங்கழித்தலற்ற நிலையை உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்போது அது சம்மந்தமான ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. அதில் திறந்த வெளியில் மலங்கழித்தலற்ற அதிக கிராமங்களைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 96.74 சதவீதம் கிராமங்கள் இந்த இலக்கை எட்டியுள்ளன. அதற்கடுத்து உள்ள தமிழ்நாட்டில் 35.39 சதவீதம் கிராமங்கள் இலக்கை எட்டியுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் உள்ள மாநிலங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இலக்கை எட்டியுள்ளன.