Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோயிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி !

Advertiesment
All pilgrims
, புதன், 10 ஜூன் 2020 (23:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஜூன் 11 ஆம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா பல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இந்நோய்த் தொற்றை குறைக்க அரசு பல்வேரு நடவடிக்கை எடுத்து வருகிறது.எனவே சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்  தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் 5ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்த்தப்பட்ட விதிகள் காரணமாக வழிப்பாட்டுத் தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக கடந்த 8,9,10 ஆம் தேதிகளில் சோதனை முறையில் பகதர்களுக்கு  தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில்நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் 3000 விற்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்தபடி சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ATM-ஐ தொடாமலேயே பணம் எடுக்கலாம்… புதிய முறை அறிமுகம்