Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகள் திறப்பதை மக்களே தடுக்கலாம்! – தமிழக அரசு சட்டத்திருத்தம்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:59 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பல இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் ஆட்சேபனைக்குரிய பகுதிகளில் கடைகள் திறப்பதை மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில அரசின் டாஸ்மாக் கடைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது என்று உத்தரவு இருந்தாலும், பல ஊர்களில் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுவது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகிறது.

இதை எதிர்த்து மக்கள் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஆட்சேபனைக்குரிய பகுதிகளில் திறப்பதை மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் எதிர்ப்பை மீறி கடைகள் திறக்க அனுமதியளித்தால் 30 நாள்களுக்குள் கலெக்டர் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்ய சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments