தமிழகத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை சரியான பாதுகாப்புகளோடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காந்தியின் அரசியல் பெரும்பாலும் கிராமங்களை மையப்படுத்தியே இருந்தது. இந்தியாவின் முதுகெலும்புகளே கிராமங்கள்தான் என்று காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டங்களையும் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனாவை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்போது காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டங்களை மிகுந்த பாதுகாப்போடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.