Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா: 3 நாட்கள் விடுமுறை!

Advertiesment
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா: 3 நாட்கள் விடுமுறை!
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (13:59 IST)
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி முதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 
9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில், இன்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி கொடூர கொலை - 3 சிறார்கள் உள்பட நால்வர் கைது