Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவ குணங்களை கொண்டாதா இஞ்சி...!

Ginger
, திங்கள், 9 மே 2022 (23:30 IST)
உங்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சி போதும். இது மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்க உதவுகிறது.
 
இஞ்சி மற்றும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இஞ்சியை தினமும் காலையில் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது முழுவதுமாக தடுத்து விடுமாம்.
 
தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியோடு உங்களின் நாளை தொடங்கினால் உடல் முழுவதும் சமமான அளவில் ரத்த ஓட்டம் இருக்கும்.
 
நமது உடலில் சேர்ந்துள்ள நச்சு தன்மை மிக்க ஒன்று தான் இந்த கெட்ட கொலஸ்ட்ரால். இவற்றை வெளியேற்ற கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. மேலும், வயிறு காரணமே இல்லாமல் உப்பி இருந்தால், அதையும் இது குறைத்து விடும்.
 
இந்த இஞ்சி பழக்கம் நமது உடலுக்கு அதிக நன்மைகளை தரும். அந்த வகையில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது குறைத்து  விடும். அத்துடன் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை இஞ்சி குறைக்குமாம்.
 
ஒரு சின்ன வேலை செய்தாலும் உங்களின் தசை அதிக சோர்வு அடைகிறதா? இந்த பிரச்சினைக்கு தீர்வை தர கூடிய தன்மை இஞ்சியிற்கு  உள்ளது. 
 
தினமும் இஞ்சியை 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உங்களின் தசை அழற்சி, சோர்வு, தசை வலி போன்றவை நீங்கி ஆற்றலுடன் இருக்கலாம்.
 
இப்போதெல்லாம் குறைந்த வயதில் இருப்பவர்களில் பலருக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டு பிரச்சினை இல்லாமல் இருக்க இஞ்சி  உங்களுக்கு உற்ற நண்பனாக உதவும். மேலும், மூட்டில் ஏற்பட கூடிய வலியையும் இது குறைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிமையான முறையில் சுவை மிகுந்த குடைமிளகாய் சட்னி செய்ய !!