Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறை; அமைச்சர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு!

புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறை; அமைச்சர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு!
, புதன், 12 ஜனவரி 2022 (16:14 IST)
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகளும் செயல்பட்டு வரும் நிலையில் துறைகளின் அடிப்படையில் தனி அமைச்சகங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 3 அமைச்சகங்களில் இடம்பெற்றுள்ள துறைகள் வேறு அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது தமிழக அரசு இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. புவியியல், சுரங்கத்துறை இயக்குனரகம், கனிமவள நிறுவனம் உள்ளிட்டவை இந்த புதிய துறையின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை!