தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:05 IST)

இன்று காலை நடந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி .முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது’. எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments