பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறு வாழ்வு வழங்க தமிழக அரசு புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது நாளுக்கு நாள் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் சட்டத்திட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க இந்த திட்டம் உதவும் என கூறப்பட்டுள்ளது, அதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.