தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கு பணிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் தொடங்கி வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. ஆண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில் அடுத்த கட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்களின் பணிக்காலம் கல்வியாண்டின் இடையே முடிவு பெற உள்ளது. கல்வி ஆண்டின் இடையே ஆசிரியர்கள் பணிக்காலம் முடிவது மாணவர்களின் கற்றலில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் கல்வியாண்டின் இடையே ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் பணிக்காலத்தை கல்வியாண்டு முடியும் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.