மதுரையில் முழுமுடக்கம் மேலும் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு!

ஞாயிறு, 12 ஜூலை 2020 (14:24 IST)
மதுரையில் இன்றுடன் முழுமுடக்கம் முடியவுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையிலும் முழுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்றுடன் மதுரையில் முழுமுடக்கம் முடிய உள்ள நிலையில் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது எப்படி??