கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை! – 45 பேர் குணமடைந்து திரும்பினர்!

ஞாயிறு, 12 ஜூலை 2020 (13:16 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சித்த மருத்துவமும் சோதனை முறையாக பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் பலர் குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்து வந்த சென்னையில் தற்போது பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் மதுரை உள்ளிட்ட வேறு சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அலோபதி சிகிச்சை முறைகள் மேற்பட்டு வரும் நிலையில், சித்த மருத்துவமனைகளிலும் சோதனையாக சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக ஏற்கனவே 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: இந்தியாவின் நிலை இதுதான்!