தமிழக மாவட்டங்களில் ஆட்சியராக பதிவி வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும், திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.