Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெக்சிகோவில் மாணவி அனிதா பெயரில் செயற்கைக்கோள்

Advertiesment
செயற்கைக்கோள்
, திங்கள், 7 மே 2018 (15:16 IST)
தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவி உருவாக்கிய அனிதா சாட் செயற்கைக்கோள் மெக்சிகோ நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது.
 
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார் வில்லட் ஒவியா. இவர் காற்று மண்டலத்தில் கலந்துள்ள மாசு குறித்து 3 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அந்த ஆராய்ச்சியின் ஒருகட்டமாக 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்.
 
மேலும், தான் உருவாக்கிய செயற்கைக்கோளுக்கு நீட் தேர்வின் கொடுமையால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை வைத்தார். இந்த செயற்கைகோள் மெக்சிகோ நாட்டில் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
 
இந்த செயற்கைக்கோள் பற்றி மாணவி வில்லட் ஒவியா கூறியிருப்பதாவது;-
 
”500 கிராம் எடைகொண்ட இந்த செயற்கைகோளில் இருக்கும் சென்சார் கருவிகள் காற்று மண்டலத்தில் கலந்துள்ள co, 02, co2 உள்ளிட்டவற்றின் அளவை கண்டுபிடிக்கும் என்றார். மேலும், மருத்துவர் ஆகும் கனவுடன் உயிரிழந்த அனிதாவின் நினைவாக இந்த செயற்கைகோளுக்கு அனிதா சாட் என்று பெயர் வைத்துள்ளேன்” என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக் டேட்டிங் எப்படி செயல்படும்?