கடந்த மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 29ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
தொலைத்தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பலவற்றிகும் உதவும் ஜிசாட்-6ஏ அதிநவீன செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
செயற்கைக்கோளுடனான இணைப்பை மீண்டும் கொண்டுவர இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.