Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி விவகாரம்; இந்து முன்னணி முடிவு என்ன? – மாலை அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (12:55 IST)
விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் முடிவே பாஜகவின் நிலைபாடு என எல்.முருகன் கூறியுள்ள நிலையில் இன்று மாலை இந்து முன்னணி தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதிக்காவிட்டாலும், சிலைகளை அமைக்கவாவது அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரி வருகின்றன. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் சிலை அமைக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தமிழக அரசு விதித்த தடை தொடரும் என அறிவித்துள்ள நிலையில் இந்து முன்னணி என்ன முடிவு எடுக்கிறதோ அதுவே பாஜகவின் நிலைபாடும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி தனது முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக தடையை மீறி விநாயகர் சிலை அமைத்து ஊர்வலம் நடத்துவோம் என இந்து முன்னணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments