Publish Date: Thu, 20 Aug 2020 (10:59 IST)
Updated Date: Thu, 20 Aug 2020 (11:08 IST)
பாஜகவில் இணைந்த ஜீவஜோதிக்கு இப்போது முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில மாதங்களுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் கட்சியில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே அவருக்கு இப்போது தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.