Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாத்தாள் மையங்களில் கேமரா, காவலர்..! – தேர்வுத்துறை நடவடிக்கை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:42 IST)
10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக குறைக்கப்பட்ட பாடங்களை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் உள்ள அறைகளில் சிசிடிவி கேமராவை அமைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள்கள் உள்ள அறைக்கு காவலர்கள் காவல் பணியில் இருக்க வேண்டும். இரட்டை பூட்டுகள் கொண்டு வினாத்தாள் அறை பூட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments