இந்தியாவில் பரவியதா புதிய வகை கொரோனா..? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:28 IST)
ஒமிக்ரானை விட வேகமாக பரவும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வந்தாலும் புதிய வகை திரிபுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான ”எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி இந்த புதிய வைரஸால் இங்கிலாந்தில் 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் “எக்ஸ்இ” வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஆடை அலங்கார நிபுணருக்கு இந்த புதிய வகை வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments