Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் தொடக்கம்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Advertiesment
எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் தொடக்கம்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
, புதன், 25 மே 2022 (12:09 IST)
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக 1 முதல் 9 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடந்துள்ளது. தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் நிலையில் பள்ளிகள் மறுதிறப்பு குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதன்படி 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி தொடங்கப்படும். 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புகளுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை! – 3 பேர் கைது!