வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தினசரி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் காரைக்கால், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கனமழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.