Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட குழு… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

Advertiesment
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட குழு… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:28 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்றுவதற்காக தீவிரமாக இயங்கி வருகிறார். அதையொட்டி விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இயங்க உள்ள அந்த குழுவில், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், செல்வகுமார், ராமஸ்ரீனிவாசன், நாகராஜன், மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதிப்பை பார்க்க சென்று வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்! – ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு!