Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுட்டு போட்டா மலராது; ஓட்டு போட்டா மலரும்: பின்னி பெடலெடுக்கும் தமிழிசை

Advertiesment
சுட்டு போட்டா மலராது; ஓட்டு போட்டா மலரும்: பின்னி பெடலெடுக்கும் தமிழிசை
, வியாழன், 10 ஜனவரி 2019 (18:35 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அப்போது அவர் பாஜக பற்றிய விமர்சனம் செய்ததற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். 
 
ஸ்டாலின், சுட்டு போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என பேசியதற்கு பாஜகவின் தமிழக மாநில் அதலைவர் தமிழிசை, சுட்டு போட்டால் தாமரை மலராது. ஆனால் மக்கள் ஓட்டு போட்டால் தாமரை மலரும் என பதில் அளித்துள்ளார். 
 
அதோடு, கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? வரும் காலத்தில் ஓரங்கட்டப்படுவோம் என்பதன் அறிகுறி? 
webdunia
5 முறை ஆண்ட திமுக! ஊழல் ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்க முடியுமா? உரக்க சொல்வோம்! ஏமாற்ற வருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்! வெல்வோம்! என்று ஸ்டாலினை விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
மேலும், கட்டாயப்படுத்தி இந்தியை புகுத்தும் நோக்கம் பாஜகவுக்கு பாஜக கூட்டணியில் மோடியின் கொள்கைளை மதிப்போருக்கும் திட்டங்களை ஆதரிப்போருக்கும் எப்போதும் இடம் உண்டு.
webdunia
அதன்படி ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்கவும், இல்லாதவர்கள் புதிய கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாக்குபிடிக்குமா சாம்சங்? ரவுண்டு கட்டும் சியோமி, ஒப்போ, விவோ!