Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாக்குபிடிக்குமா சாம்சங்? ரவுண்டு கட்டும் சியோமி, ஒப்போ, விவோ!

தாக்குபிடிக்குமா சாம்சங்? ரவுண்டு கட்டும் சியோமி, ஒப்போ, விவோ!
, வியாழன், 10 ஜனவரி 2019 (17:22 IST)
பொதுவாகவே பண்டிகை என்றால் அதிகம் கல்லாகட்டுவது ஸ்மார்ட்போன் நிறுவாங்கள்தான். தள்ளுபடி விற்பனை, கேஷ்பேக், இலவசங்கள் என பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் மீது ஆஃபர் வழங்கப்படும். 
 
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு தென் கொரிய நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் எம்20 ஆகிய போன்கள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இரண்டு மாடல் ஸ்மரட்போன்களும் பட்ஜெட் ரகங்கள்தான். 
 
தற்போதெல்லாம் பட்ஜெட் என்றாலே ஜியோமி, ஒப்போ, விவோ போன்ர பிரண்டுகள்தான் நினைவிற்கு வருகிறது. அதுவும், சாம்சங் நிறுவனத்தின் முக்கிய போட்டியாக இருப்பது சியோமி நிறுவனம். 
 
கடந்த தீபாவளி விற்பனையின் போதுகூட சியோமி ஸ்மார்ட்போன்களே அதிகம் விற்பனை ஆனாது. இதனால், இந்த முரை சாம்சங் தனது விறபனியில் தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
சாம்சங் வெளியிடும் கேலக்சி எம் 10 மாடல் போன் ரூ.9,500 மற்றும் எம்20 ரூ.15,000 என்ற விலையில் விற்பனையாகும். இவை தவிர எம்30 மாடலும் வெளியாக உள்ளது என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் ஸ்கூட்டர்! 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!