Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’உண்டியல்கள் பத்திரமுங்கோ... போலி பக்தர்கள் வர்றாங்க...’ஸ்டாலினை கிண்டலடித்த தமிழிசை

’உண்டியல்கள் பத்திரமுங்கோ... போலி பக்தர்கள் வர்றாங்க...’ஸ்டாலினை  கிண்டலடித்த தமிழிசை
, புதன், 20 பிப்ரவரி 2019 (19:31 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் நகர்வுகள் எல்லாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூடுபிடித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான ஜெயலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் அதிமுகவும், திமுகவும் சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இதுவாகும். 
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இருந்தவரை தமிழக அரசியல் வானம் பகை மேகத்தையே சூழ்ந்து கொண்டிருந்தது. தற்போது அது தீர்ந்திருக்குமா என்றால் அது கேள்விக்குறியே. ஆனால் தேசிய அரசியலில் சற்று நாகரிகமான போக்கு நிலவுவது ஆறுதலளிக்கக்கூடியதாகும். 
webdunia
சில தினங்களுக்கு முன் தங்கள் கிராம சபைக் கூட்டங்களை திமுக காப்பி அடிக்கிறது என மநீம தலிவர் கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கு திமுகவினர் காந்தி கண்டுபிடித்தது கிராம சபை கூட்டத்தை, கமல் தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தது போல் பேசுகிறார் என குற்றம் சாட்டினர். உதயநிதி ஸ்டாலினும் கமல் மீது  குற்றம் சாட்டினார். 
webdunia
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலினிடம் ஒரு செய்தியாளர், கமல் உங்களை  தொடர்ந்து விமர்சிக்கிறாரே என்று கேட்டதற்கு நான் அரசியல் மத்தி பேசுகிறேன் என்று கூற... அருகே இருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்..
 
இந்நிலையில் இன்று காலை திருமழிசையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘கிராமங்கள் தான் கோவில் என மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். எனவே நாங்கள் தான் இந்த கோவிலை தேடி வந்துள்ள உண்மையான பக்தன் என்று தெரிவித்தார் ’ஸ்டாலின்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பார் என்று பார்த்தால் தமிழக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
webdunia
'உண்டியல்கள் சிலைகள் பத்திரம். போலி பக்தர்கள் நடமாட்டம் .ஓர் எச்சரிக்கை நலன் கருதி என்று தெரிவித்திருந்தார்.'
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு ஸ்டாலின் இதுவரை பதில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீழ்வேன் என்று நினைத்தாயோ...!! திருப்பி அடிக்கும் பிஎஸ்என்எல்