Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிக் டாக்கை தடை செய்யுங்க.. நான் சந்தோசபடுவேன்.. தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

டிக் டாக்கை தடை செய்யுங்க.. நான் சந்தோசபடுவேன்.. தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (19:00 IST)
டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் தான்தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 
இன்று தமிழக சட்டப்பேரவையில் டிக் டாக் ஆப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.
 
இதற்கு பதில் அளித்து பேசிய  தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் ஆப் மீது கண்டிப்பாக தடை விதிக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
 
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள்  நான்தான். அதை கண்டிப்பாக நான் வரவேற்பேன். டிக் டாக்கில் தேவையில்லாமல் பலரை கிண்டல் செய்கிறார்கள். எங்களை போன்ற அரசியல்வாதிகளை, பிரபலங்களை இந்த ஆப் மூலம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த ஆப்பிற்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும். லோக்சபாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் நான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இன்னும் சில வருஷம்தான் உயிரோடு இருப்பேன்: 'நா தழு தழுத்த' வைகோ