Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேர் வேண்டுமா? நீர் வேண்டுமா? - வார்த்தைகளில் விளையாடும் தமிழிசை

பேர் வேண்டுமா? நீர் வேண்டுமா? - வார்த்தைகளில் விளையாடும் தமிழிசை
, வியாழன், 29 மார்ச் 2018 (09:34 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த ஆறுவார கால கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாததால், இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
அந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்னொரு புறம் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் இல்லையே அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று மிரட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “ இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இதில் கண்டிப்பாக நல்ல முடிவு ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை எனில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக வெளியான செய்தி உறுதி இல்லை. அதற்கு அவசியம் இருக்காது. கண்டிப்பாக ஒரு குழு அமைக்கப்படும். நமக்கு பெயர் வேண்டுமா? நீர் வேண்டுமா? என்றால் நீர்தான் வேண்டும்” எனக் கூறினார்.
 
இதன் மூலம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது. அதற்கு பதில் ஒரு குழுவை அமைப்போம் என்பதுதான் பாஜகவில் நிலைப்பாடு என தமிழிசை சூசமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது: கருத்து கூறிய சசிகலா சகோதரர்