Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிழிந்த சட்டை இல்லனா கருப்பு சட்டை: ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை

Advertiesment
கிழிந்த சட்டை இல்லனா கருப்பு சட்டை: ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை
, வியாழன், 15 மார்ச் 2018 (18:29 IST)
ஸ்டாலின் கிழந்த சட்டை அல்லது கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வருவதை பழக்கமாக வைத்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 ஆண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். அவருடன் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டையில் வந்திருந்தனர்.
 
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்டாலின் சட்டசபைக்குள் கிழந்த சட்டை அல்லது கருப்பு சட்டையுடன் வருவதையே பழக்கமாக வைத்துள்ளார் என்றார். மேலும், தினகரன் தொடங்கிய புதிய அணி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை; சட்டம் நிறைவேற்றிய ஹரியானா